• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி

November 9, 2018 தண்டோரா குழு

கோவை,திருப்பூர்,நீலகிரி,ஈரோடு மற்றும் சேலத்தில் பன்றி காய்ச்சல்,டெங்கு காய்ச்சல்,மூளை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.கோவை மட்டுமின்றி,கோவையை சுற்றியுள்ள இந்த மாவட்டங்களிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால்,கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு துவங்கப்பட்டிருந்தாலும்,உயிரிறப்பும் அதிகரித்து வருகின்றது.தினமும் சராசரியாக இந்த காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோவை பீளமேடு அடுத்த காந்திநகரை சேர்ந்த சிவசக்தியின் மனைவி காயத்ரி(28)கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்,நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தநிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பலியானார்.இதே போல், கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த புஷ்பா(40) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 3 நாளில் கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும்,கடந்த 2 வாரத்தில் 33 ஆகவும்,கடந்த 2 மாதங்களில் 43 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க