September 24, 2018
தண்டோரா குழு
சின்ன வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர்,ஆலாந்துரை,தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் பல ஏக்கரில் பயிரிட்டிருந்தனர்.இந்நிலையில் சின்னவெங்காயத்தை பதப்படுத்த போதுமான கிடங்குகள் இல்லாமல் வெங்காயம் அழுகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இருக்கின்ற கிடங்குகள் காற்றோட்டம் இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.சின்ன வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும்,ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்ச ரூபாய் வழங்க வலியுறுத்தி அழுகிய சின்ன வெங்காயத்தை எடுத்து வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு அளித்தனர்.