September 6, 2018
தண்டோரா குழு
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி மீது,பாஜக அகில இந்திய இளைஞரணி துணை தலைவர் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்களையும்,இறைவன் கிருஷ்ணனையும் அவதூறாக சித்தரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும்,இதனால் இந்துக்களின் நம்பிக்கை அவதூறு ஏற்படுத்தியதுடன்,நாட்டில் உள்ள பெண்களையும் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் கூறி இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீரஜ் பாரதிக்கு எதிராக பாஜகவினர் புகார் மனு அளித்து வருகின்றனர். நீரஜ் பாரதி ஹிமாச்சல் பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஜாவல் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ.வாகவும்,முதன்மை நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தவர்.இந்த புகார் மனுவை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்து விசாரிக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.