September 24, 2018
தண்டோரா குழு
சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் மாற்றுத்திறனாளி ஒருவர் விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் மாற்றுத்திறனாளியான இவர்,அரசு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் சாலை பாதுகாப்பையும்,தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கார் பயணத்தை துவங்கியுள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பயணம் தமிழகம் முழுவதும் 42 நகரங்கள் வழியாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ளதாகவும்,10 நாட்களில் மீண்டும் கோவையில் நிறைவு பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனி நபராக இப்பயணம் மேற்கொள்ள உள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.மாற்றுதிறனாளியான பிரின்ஸ் காரை இயக்க,எக்ஸ்லெட்டரை கையால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.