• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோரூமில் தீ விபத்து

August 22, 2018 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோரூமில் மின்கசிவால் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 49 லட்சம் மதிப்பள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.

கோவை ஒப்பணக்கார வீதியில் இருக்கும் பாட்டா ஷோரூமில் பணியாளர்கள் வழக்கம் போல் கடையை மூடி சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அந்தக் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியது.இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர்,விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் பாட்டா ஷோரூமின் ஷட்டரை உடைத்து தீயை தற்போது அனைத்து வருகின்றனர். சுமார் ஒன்பது மணிக்கு பிடித்த தீயை தற்போது வரை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல இந்த கடையிலிருந்து வெளிவரும் கரும்புகையானது ஒப்பணக்கார வீதியை சுற்றியுள்ள பகுதிகளில் பரவி வருகிறது.இதனால் 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க