• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரவிந்த் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவி தூக்கிட்டு தற்கொலை

September 18, 2018 தண்டோரா குழு

கோவை அரவிந்த் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவி மாலினி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

உடுமலைபேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் சைலஜா தம்பதியினர் இவர்களது மகள் மாலினி கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் மூன்றாமாண்டு நர்சிங் பயிற்சி பெற்று வருகிறார்.மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த மாலினி ஒன்பதாம் எண் கொண்ட தனது அறையில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மாலினியின் உடலை கைப்பற்றி பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,மாலினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும்,இறந்த மாலினியின் உடலை காண காவல்துறையினர் இதுவரை அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டிய உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் மாலினி இறப்பு குறித்தும் சரிவர பெற்றோரிடம் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

கோவைக்கு பயிற்சி பெற இரண்டு மாதத்திற்கு முன்னர் வந்த மாலினி,நன்கு படிக்க கூடிய மாணவியாகவும், தைரியமான பெண்ணாக இருந்ததாகவும் தெரிவிக்கும் உறவினர்கள் பீளமேடு காவல்துறையினர் புகாரை அவர்கள் விருப்பத்திற்கு மாற்றி எழுதுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்க