September 4, 2018
தண்டோரா குழு
கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் காளப்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.இதில் கோவை, நீலகிரி,பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆலோசனைக்கூட்டம் கழகத்தின் அமைப்பு செயலாளரும்,கோவை மண்டல பொறுப்பாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மண்டல இணை பொறுப்பாளர் இஸ்மாயில்,பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சிவசாமி,சுகுமார் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு,கழக அமைப்பு செயாலாளர்கள் அப்பாத்துரை,உடுமலை கே.ஜி சண்முகம் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.