September 3, 2018
தண்டோரா குழு
கோவையில் வழித்தட பிரச்சனை தொடர்பாக 13 வயது சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் தனியாக வந்து இன்று மனு அளித்தார்.
கோவை மைல்கல் பிள்ளையார் பகுதியை சேர்ந்தவர்கள் நாகேந்திரன் – பூங்கொடி தம்பதி.இவர்களது வீட்டுக்கு செல்லும் வழித்தடம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகின்றது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில் பொது பணிசூழல் காரணமாக விடுமுறை கிடைக்காத காரணத்தால் தங்களது 13 வயது மகன் நவநீதகிருஷ்ணிடம் மனுவை கொடுத்து அனுப்பினர்.
பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த மாணவன் நவநீதகிருஷ்ணன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.பின்னர் வழித்தட பிரச்சனைக்காக பெற்றோரால் வர முடியாத காரணத்தால் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.