• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர்!

September 24, 2018 தண்டோரா குழு

இளம் காதல் ஜோடி நிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இருமனங்கள் இணையும் திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் தான்.உறவினர்கள் ஓன்று கூடி நடக்கும் திருமணத்தில் மணமக்களின் உடைகள் தான் அனைவரையும் கவரும்.ஆனால் இத்தாலியில் ஒரு இளம் தம்பதினர் இந்த வழக்கத்தை மாற்றி நிர்வாணமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடியான வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன் ஆகியோர் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இவர்கள் இருவரும் இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்.இதனால் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.எப்படியும் இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இருவரும் இத்தாலியில் உள்ள தீவில் நிர்வாணமாக திருமணம் செய்துக் கொண்டனர்.இந்த திருமணத்திற்கு தங்களது நண்பர்கள் 2 பேரை மட்டுமே அழைத்துள்ளனர்.அவர்களும் திருமணத்தின் போது நிர்வாணமாகவே கலந்துக் கொண்டனர்.

இதுகுறித்து மணப்பெண் ஆன்கா ஆர்சன் கூறுகையில்,

எங்களது இந்த நிர்வாண திருமண ஆசைக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தான் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைக்காமல் 2 பேரை மட்டும் அழைத்தோம்.இந்தாண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவுள்ளோம்.அதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

இந்த திருமணத்தின் போது மணமகள் ஆன்கா ஆர்சன் தலைக்கு பின்னால் மணப்பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற அமைப்பை மட்டும் அணித்திருந்தார்.மணமகன் ‘போ’ என்றழைக்கப்படும் கழுத்து பட்டியை மட்டும் அணிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றனர்.மேலும்,இவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க