September 24, 2018
தண்டோரா குழு
அதிமுக எம்.பி. அருண்மொழிதேவன் கொடுத்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆலயங்கள் மீட்பு என்ற பெயரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக எம்.பி.அருண்மொழித்தேவன்,திட்டக்குடி குளத்தை ஆக்கிரமித்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைக்கண்டித்து,ஹெச்.ராஜாவுக்கு எதிராக அதிமுக எம்.பி. அருண்மொழித் தேவன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில்,இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்.ராஜா மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துவது,பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.