September 25, 2018
தண்டோரா குழு
என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.அப்போது,பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே,அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதையடுத்து,கடந்த 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும்,4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது எச்.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரிஞர்,எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது.இது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே நேரில் ஆஜராக உத்தரவிட முடியும் என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து,இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்துள்ளது.