September 17, 2018
தண்டோரா குழு
எச்.ராஜா காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் பேசியுள்ளது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன் என்றும் அவர் முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில்,கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
“விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது காட்டு மிராண்டிகள் என சுட்டிக் காட்டினார்.தமிழகத்தில் ஜனநாயக உரிமையும்,கருத்துரிமையும் இருப்பதால் தான் எச்.ராஜாவால் பேச முடிகின்றது என கூறியவர்,எச்.ராஜா பேசியதையும்,மாணவி சோபியா பேசியதையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல என தெரிவித்தார்.
தமிழிசைக்கு ஏற்பட்டது போல அரசியல் கட்சியினர் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் சோபியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அதிமுக சிறப்பாக,தெம்பாக இருப்பதாகவும்,இங்கிருந்து ஒருவர் போனால் 10 பேர் வருவார்கள் எனக் கூறினார்.எச்.ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததோடு,அவர் முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அவதூறு கூறியவர்கள் மீது அம்மா குற்றச்சாட்டின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடுத்தார்.இப்போது பிரச்சனையில்லாத ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.குற்றம் சொல்வது திமுகவின் வாடிக்கை எனவும் எதிர்கட்சியின் பணியை ஸ்டாலின் செய்து வருகிறார் எனக் கூறினார்.
மேலும் தமிழ்நாடு காவல்துறை இந்திய அளவில்,உலகலவில் சிறந்தது என்ற பேச்சு உள்ள நிலையில்,எச்.ராஜா காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் பேசியுள்ளது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன் எனக் கூறினார்.அவர் மீதான வழக்கில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அதிமுகவில் உயர்பதவி முதலமைச்சர் தான் வேறு யாரும் உயர் பதவி இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பதவி வழங்கியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்”.இவ்வாறு பேசினார்