• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது – ராஜ்நாத் சிங்

August 16, 2018 தண்டோரா குழு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு,சிறுநீரக தொற்று நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு சென்று,வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.பின்னர் பேசிய அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும்,மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க