September 6, 2018
தண்டோரா குழு
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசைக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்வதற்காக சதி செய்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.இதனால் கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தில் செல்லும் போது பாசிச பாஜக ஒழிக என சோபியா என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசையை நோக்கி முழக்கமிட்டார்.இதனால் அர்ஜூன் சம்பத் மற்றும் தமிழிசை உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க கோரி கோவையில் உள்ள அரசு மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர்.
மேலும்,இந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த கடிதத்தை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்தனர்.