September 8, 2018
தண்டோரா குழு
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்பு,அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள்,அக்கட்சி எம்.பி கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
செப்.18ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்.
செப். 10ல் நடைபெறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிர்ப்பு பந்த்துக்கு ஆதரவு.
கடைமடைக்கு காவிரி செல்லாமல் வீணாவைத் தடுக்க வேண்டும்.
அதிமுக ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
குட்கா ஊழலில் சிக்கிய விஜயபாஸ்கர்,டிஜிபியை நீக்க வேண்டும். உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.