• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானங்களில் சாம்சங் கேலக்ஸி 7க்கு தடை

September 9, 2016 தண்டோரா குழு

விமானங்களில் சாம்சங் கேலக்சி நோட் 7 (Samsung Galaxy Note 7) மொபைல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் உலகம் முழுவதும் மொபைல் விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தற்போது அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காரணம் கடந்த சில நாட்களாகப் பல இடங்களில் கேலக்சி நோட் 7 மொபைலின் பேட்டரிகள் வெடித்ததாக வந்த புகார்கள் தான். பல வாடிக்கையாளர்கள் தனது நோட் 7, சார்ஜ் செய்யும் போதோ, அல்லது சார்ஜ் ஏற்றியதற்குப் பிறகோ, வெடித்துவிட்டதாகப் புகார்களை சாம்சங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தற்போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனின் பேட்டரி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால், அதனை ஆஃப் செய்து கொண்டு பயணிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்ககம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், விமானத்தில் சார்ஜ் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேப் போன்று, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சாம்சங் போனுக்கு விமானத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும், கேலக்ஸி நோட் 7 போன்களின் பேட்டரி தீப்பிடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் அதனைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன், 59,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க