• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது அருந்தி விட்டு பணிக்கு வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து

November 12, 2018 தண்டோரா குழு

பணியின்போது மது அருந்திவிட்டு விமானத்தை இயக்க வந்த மூத்த விமானியின் உரிமத்தை 3 வருடத்துக்கு ரத்து செய்து ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது.விமானத்தை இயக்க மூத்த விமானி அரவிந்த் கத்பாலியா வந்தார். அவருக்கு மதுபோதை பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்துள்ளது.

முதல் பரிசோதனையடுத்து இரண்டாம் பரிசோதனை செயப்பட்டதில் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டு அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.அவர் பணிக்கு மது அருந்தி வந்தது இது இரண்டாவது முறையாகும் எனவே ஏர் இந்தியா நிறுவனம் அவரது உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளது.இதனால் டெல்லியில் இருந்து லண்டனுக்குப் பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் தாமதமாகவே புறப்பட்டது.

மேலும் படிக்க