October 16, 2018 
தண்டோரா குழு
                                கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  கூறியுள்ளார்.நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஆளும் அதிமுக அரசு குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.இதற்கு தமிழக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலஜி,
“எம்.ஜி.ஆர் மக்களோடு இருந்து மாளிகை கண்டவர்.ஆனால்,கமல் மாளிகையிலிருந்து மக்களை பார்ப்பவர்.தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமலஹாசன் நாடகம் நடத்துகிறார்.அந்த நாடகம் தேர்தலுக்கு ஒத்துவராது.வெளிநாட்டு தீய சக்திகளோடு கமல் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் அவர் மீது ஏற்படுகிறது.நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என்றும்,அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் ஆபத்து  எனக் கூறியுள்ளார்.மேலும்,ரஜினிகாந்த் நேர்மையான வழியில் செல்பவர் என்றும் ஆன்மீகவாதி”.இவ்வாறு பேசினார்.