• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் DNA பரிசோதனைக்கு தயாரா? வெற்றிவேல்

October 23, 2018 தண்டோரா குழு

பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் DNA பரிசோதனைக்கு தயாரா? என தினகரன் ஆதவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.அமைச்சர் ஜெயகுமார் மீதான குற்றச்சாட்டு வாட்ஸ்அப் ஆடியோ குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“ஜெயக்குமார் விவகாரம் தொடர்பாக ஆடியோ,வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.ஜெயக்குமார் எத்தனை பெண்களிடம் தவறிழைத்துள்ளார் என்பதற்கு பட்டியலே உள்ளது.ஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும்.என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் ஜெயக்குமாருக்கு விபரீதமாகி விடும்.

உரிய ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் குற்றச்சாட்டுகள் எதுவும் கூற மாட்டோம்.குரல் தன்னுடையது இல்லை என்றுதான் ஜெயக்குமார் கூறினார். குழந்தை தன்னுடையது இல்லை என்று கூறவில்லை.ஆடியோ வெளியிட்டவர்களை கண்டுபிடித்து தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.குழந்தையை அமைச்சர் ஜெயக்குமார் ஏற்றுக் கொண்டு சொத்தில் பங்கு தர வேண்டும்.ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டால் சம்மந்தப்பட்ட பெண் புகார் கொடுப்பார்.

சம்மந்தப்பட்ட பெண் வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்.ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை.அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும்.ஜெயகுமார் ஆடியோ விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தை தொடர்பாக டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும்.பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாரா? அபலைப் பெண்ணுக்கு குரல் கொடுப்பதற்காக உண்மையைச் சொல்கிறேன்.பாதிக்கப்பட்ட பெண் என்னுடைய பாதுகாப்பில் இல்லை”இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க