September 26, 2018
தண்டோரா குழு
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்ததற்காக பிரபல நடிகையும்,காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரபேல் போர் விமான விவகாரம் நாட்டில் பெரும் விவாதமாக கிளம்பியுள்ளது.காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இதற்கிடையில்,காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராக உள்ள நடிகை ரம்யா,டுவிட்டரில் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளதுடன்,அவரது புகைப்படத்தையும் கேலி செய்யும் வகையில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து,ரம்யாவின் டுவிட்டர் பதிவு,பிரதமர் மோடியை குறிவைத்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையது ரிஸ்வான்,கோமித்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் நடிகை ரம்யா மீது உத்தரப்பிரதேச போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.