September 17, 2018
தண்டோரா குழு
வீடுகள்,கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் நடித்துள்ள “மூன்றாவது கண் ” என்ற குறும்படம் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களைக் குறைப்பதற்காக மக்கள் அனைவரும் வீடுகளிலும்,வணிக வளாகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதை வலியுறுத்தும் விதமாக (தேர்ட் ஐ) ‘மூன்றாவது கண்’ என்கிற விழிப்புணர்வுக் குறும்படம் உருவாகியுள்ளது.நடிகர் விக்ரம் நடித்துள்ள இந்த குறும்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்.சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குறும்பட வெளியீடட்டு விழாவில் குறும்படத்தை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வெளியிட்டார்.
மேலும்,இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும்,சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்.சிங்கப்பூரை போல் பெண்கள் பயமின்றி நடமாடும் நிலைமை விரைவில் சென்னையிலும் வரும் என்றுக் கூறினார்.