September 24, 2018
தண்டோரா குழு
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்றும்,டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ரஜினி கட்சி தொடங்குவது உறுதி.ரஜினி மக்கள் மன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.ஒரு மாதம் தொடர் நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.ரஜினி மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார்.ரஜினி கட்சி தொடங்குவது உறுதி.டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும்”.இவ்வாறு பேசினார்.