• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

A1 திரைப்படத்தை தடை செய்யக்கோரி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு

தண்டோரா குழு
July 23, 2019

பிராமண சமுதாய பெண்களை இழிவு படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட A 1 என்ற திரைப்பட காட்சிகளை தடை செய்ய கோரி கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சமீபத்தில் A 1 என்ற திரைப்படம் நடிகர் சந்தானம் மற்றும் ஜான்சன் தயாரிப்பில் ராஜ்நாராயணன் அவர்களின் குழுவினரால் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வரும் 26 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தில் முட்டை சாப்பிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அக்ரகார மாமி,மயங்கி விழுந்த மாமியின் தோப்பானார்என்று இதுபோல் பிராமணர் பெண்களை காதல் என்ற பெயரில் இழிவாகவும்பிராமணர்களை கொச்சைப்படுத்தியும்,ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தடை செய்ய கோரியும்,பட தயாரிப்பு குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யாவிடம் அகில பாரத பிராமணர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி உலக அளவில் மிக பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க