• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு

October 19, 2018

கோவையில்,ஆரம்பக்கல்வியை துவக்கி வைக்கும் விதமாக நடைபெற்ற,வித்யாரம்பம் நிகழ்ச்சியில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

ஆரம்பக் கல்வியை துவங்கும் குழந்தைகளின் நாவில் ஸ்ரீஹரி மந்திரத்தையும்,உயிரெழுத்தையும் எழுதி,அவர்களது கல்விப் பயணம் துவக்கி வைக்கப்படும்.நிகழ்ச்சிக்கு வித்யாரம்பம் (எழுத்தறிவித்தல்) என்று பெயர்.விஜயதசமி நன்னாளில்,கல்விக் கடவுளை வணங்கி குழந்தைகளுக்கு இந்த எழுத்தறிவித்தல் போதிக்கப்படும்.

கோவை சலிவன் வீதி மாரன்னகவுண்டர் பள்ளி வளாகத்தில்உள்ள ஸ்ரீசத்யநாராயணசுவாமி திருக்கோயிலில், நடைபெற்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கலந்துகொண்டனர்.அஜீத் சைதன்யா அவர்கள் குழந்தைகளின் நாக்கில் ஸ்ரீஹரி மந்திரத்தை எழுதி, ஆரம்பக்கல்வியை துவக்கி வைத்தார். பக்தர்களின் வசதிக்கு பல்வேறு ஏற்பாடுகளை ஹிந்து தர்ம வித்யா பீடம் மற்றும் பெசண்ட் நூற்றாண்டு அறக்கட்டளை, செய்திருந்தது.

மேலும் படிக்க