• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு,கேரளா,கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

October 19, 2018 தண்டோரா குழு

சபரிமலை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு,கேரளா,கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த புதனன்று திறக்கப்பட்டது. இதையடுத்து கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர்.கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ் உடையில் ஹெல்மெட் அணிந்து பலத்த எதிர்ப்புக்கு இடையே சன்னிதானத்தை நெருங்கினார்.அவருடன் இன்னொரு பெண் பக்தரும் சென்றார்.சன்னிதானத்தை நெருங்கிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா,கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

அக்கடிதத்தில்,சபரிமலையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும்,சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,தேவைப்பட்டால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவையை முடக்கி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க