• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

58வது காவல்துறை விளையாட்டு போட்டி தொடர் ஜோதி கோவை வந்தது

July 25, 2018 தண்டோரா குழு

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறைக்கான 58 ஆவது விளையாட்டுப் போட்டி வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.இதனையடுத்து இந்த விளையாட்டு போட்டி தொடங்கும் விதமாக தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஜோதி கடந்த 24ம் தேதி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு இன்று கோவை மேற்கு மண்டலம் வந்தடைந்தது.இந்த ஜோதியை மேற்கு மண்டல தலைவர் பாரி பெற்றுக் கொண்டார்.பின்னர் மேற்கு மண்டலத்தைச் சார்ந்த காவல்துறை விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட தொடர் ஜோதி ஓட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள காவல்துறை மேற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் காவல்துறை மேற்கு மண்டல தலைவர் பாரி கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பெரியய்யா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்த ஓட்டம் கோவை வ.ஊ.சி மைதானம் வரை சென்று,பின்னர் இந்த ஜோதி இங்கிருந்து புறப்பட்டு மதுரை வழியாக வரும் 27ஆம் தேதி திருச்சி சென்றடையவுள்ளது.பின்னர் அங்கு அந்த ஜோதி ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம் ஆகின்றன.

மேலும் படிக்க