• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

47 வது வார்டை அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக மாற்றுவேன் – அதிமுக வேட்பாளர்

February 8, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 47 வது வார்டை அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக மாற்றுவேன் என அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.பிரபாகரன்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாகி உள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டில் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து கவுன்சிலராக பணியாற்றியவர் பிரபாகரன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர்,தற்போது நான்காவது முறையாக அதே வார்டில் களமிறங்கி உள்ளார்.

அந்த பகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்ற பிரபாகரன் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவையில் 47 வது வார்டை பொறுத்தவரை கடந்த பத்து வருடங்களில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளதாக கூறிய அவர், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரி வார்டாக எனது வார்டை மாற்றுவேன் என உறுதி அளித்தார்.

மேலும் படிக்க