• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளோம்- இந்திரா பானர்ஜி

April 28, 2018 தண்டோரா குழு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள்‌‌‌,முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கான தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் கோரிய வழக்கில் மனசாட்சிபடி தீர்ப்பளித்துள்ளதாக கூறினார்.மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கபடும் என்று கூறினார்.

மேலும் படிக்க