• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

400 பள்ளிமாணவர்களின் உயிரை காப்பாற்றிய காவலர்

August 29, 2017 தண்டோரா குழு

மத்தியபிரதேஷத்தில் 400 பள்ளிக்குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு 5௦௦௦௦ ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேஷ் மாநிலத்தின் சிட்டோரா என்னும் கிராமத்திலுள்ள பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் சுமார் 1௦ கிலோ எடையுள்ள வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தகவல் அறிந்த காவலர்கள் உடனே அந்த பள்ளிக்கு சென்று சோதனை செய்தபோது, மர்ம நபர்களால் அங்கு வைக்கபட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தலைமை காவலர் அபிசேக் படேல், தனது உயிரை பொருட்படுத்தாமல்,அந்த வெடிகுண்டை பள்ளியிலிருந்து வெகுதூரம் எடுத்து செல்ல முடிவு செய்தார்.

உடனே, அதை எடுத்துக்கொண்டு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஓடி, பாதுகாப்பான இடத்தில் அதை அப்புறப்படுத்தினார். இந்த வீர செயலை செய்தியாளர் ஒருவர் காணொளியாக எடுத்து, இணையதளத்தில் பதிவிட்டார். அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு வேலை அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், சுமார் 5௦௦ மீட்டர் சுற்றியிருக்கும் இடம் முற்றிலும் சேதம் அடைந்திருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபிஷேக் படேலின் இந்த வீர செயலை அறிந்த மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹன், அவருக்கு 5௦, ௦௦௦ ரூபாய் பரிசு தொகையை வழங்கினார்.

மேலும் அந்த பள்ளியில் யார் வெடிகுண்டு வைத்தனர் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க