• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

April 24, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கியது.

தமிழகத்தில் ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்த நிலையில் காலியாக உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அமமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இதற்கிடையில், மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் அமமுக போட்டியிட்டது. இதையடுத்து, நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்க வேண்டும் என தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க