• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

300 க்கும் மேற்பட்டோர் இணைந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

January 4, 2021 தண்டோரா குழு

300 க்கும் மேற்பட்டோர் இணைந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி இந்த ஆண்டின் முதல் நோபள் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

நாட்டுப்புற கலை மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் உலக சாதனை செய்வதில் தற்போதைய இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் ஃபிட் இந்தியா சார்பாக கோவை, திண்டுக்கல் மதுரை தேனி சிவகங்கை காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் இணைந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு துவங்கி மாலை எட்டு மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியை பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில் நோபள் புக் ஆப் ரெக்கார்டு புத்தக வெளியீட்டாளர் கோவையை சேர்ந்த தியாகு நாகராஜ் கண்காணித்து சாதனைக்கான சான்றிதழை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல,சிலம்ப ஆசான்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டின் நோபள் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முதல் சாதனை நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.

மேலும் படிக்க