• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 அதிமுக எம்.எல்.ஏ.மீது நடவடிக்கை எடுப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்? முதல்வர் கேள்வி

May 1, 2019 தண்டோரா குழு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் திமுக, அமமுக இடையேயான நெருக்கம் வெளிப்நட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தல் தொகுதிகளில் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். சபாநாயகர் மீது எந்த அடிப்படையில் திமுகவினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என தெரியவில்லை,3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் சிறப்பான வெற்றி பெறுவோம். தமிழ்நாடு, புதுச்சேரியில்
39 தொகுதி தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இருப்பதால் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அறிக்கை வரவில்லை. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மூலம்திமுக, அமமுக இடையேயான நெருக்கம் வெளிவந்தது.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 3 அதிமுக எம்.எல்.ஏ.மீது நடவடிக்கை எடுப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.மேலும்,தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டு குடிநீர் பிரச்சனை எங்கும் ஏற்படக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க