• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி தீர்ப்பின் வரவேற்பு சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் – ஆ.ராசா

December 27, 2017 தண்டோரா குழு

2ஜி தீர்ப்பின் வரவேற்பு சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
தெரிவித்துள்ளார்.

2ஜி தீர்ப்பிற்கு பிறகு திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று கோவை வந்தார்.இந்நிலையில் கோவை மாவட்டம் கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட செல்லும் வழியெல்லாம் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 ஜி தீர்ப்பு குறித்து ஆ.ராசா கூறுகையில்,

2 ஜி தீர்ப்பை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளனர்.மேலும், இந்த வரவேற்பு சட்டமன்றத்தில் எதிரொலிக்கும்.2 ஜி தீர்ப்பு மூலம் ஊழல் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ள தீர்ப்பை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும் படிக்க