புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பணமதிப்பு இழப்பு விவகாரத்தில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளிவர இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுபற்றி ரிசர்வ் வங்கி எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில் புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும்.புதிதாக வெளிவரும் 50 ரூபாய் நோட்டில் சிறப்பம்சமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஹம்பி கோவில் தேரின் படம் இடம்பெறும்.மேலும் ஸ்வச் பாரத் இந்தியாவின் லோகா ஒருபுறம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய பெருமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.மேலும்,பழைய 50 ரூபாய் தொடர்ந்து செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 41 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்