• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் கொரியாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு

July 31, 2017 தண்டோரா குழு

தென் கொரியாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு அடைந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்வடைய முயற்சிகள் எடுக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் பிறப்பு, இந்த ஆண்டில் மிகவும் குறைந்துள்ளது. இந்த குறைவுக்கு வேலையின்மையும் ஒரு முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதால் பெரிய அளவிலான குடும்பங்களை கவனித்துக்கொள்ள முடியவில்லை. அதோடு, மகப்பேறு விடுமுறைகள் குறைவாக இருக்கிறது. இது போன்ற நிலையில் குழந்தைகளை எப்படி பெற்று வளர்க்கிறது என்பதால் பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள யோசிக்கிறார்கள்.

தென் கொரியாவில், இவ்வாண்டில் தொடக்கத்திலிருந்து இப்போது வரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 400,000 குறைவாக உள்ளது. குழந்தைகள் போனஸ், மேம்படுத்த பட்ட மகப்பேறு விடுமுறை, குழந்தையின்மை சிகிச்சைக்கு அரசே பண உதவி வழங்கியது. இவற்றிக்காக சுமார் 70 பில்லியன் டாலர் (53 பில்லியன் பவுண்ட்) செலவிடப்பட்டது.

மக்கள் தொகை குறைவால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க