• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

24 மணி நேரம் குடிநீர் திட்டம் செயல்பாடு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு

December 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் 24 மணி நேரம் குடிநீர் திட்டம் செயல்பாடுகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் அம்ரூத் திட்டம், 24 மனி நேர குடிநீர் திட்டம் செயல்பாடுகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார். துணை மேயர் வெற்றிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா பேசியதாவது:

கோவை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைத்திட வழிவகை செய்தல், குடிநீரை 24 மணி நேரமும் வழங்குதல், குடிநீரை சேமித்தல், சுகாதாரமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சி, 12 நகராட்சி, 1 பேரூராட்சிகளில் அம்ரூத் திட்டத்தின்கீழ் 24மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சி இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து 80க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்கள். இவர்களுக்கு கோவை மாநகராட்சிக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி, வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், பில்லூர் -1,2 திட்டம் மற்றும் பில்லூர் -3 திட்ட பணிகள் நடைபெற்று வருவதை விரிவாக எடுத்துரைக்கப்படும்.இந்தியாவில் பூரி மாநகராட்சியில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது கோவை மாநகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து பூனே பகுதியிலும் அம்ரூத் திட்டம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 நாள் நடைபெறும் இந்த பயிற்சி மற்றும் கருத்தரங்கை பொறியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநகரப்பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க