• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் தி.மு.க மா.செ கூட்டத்தில் தீர்மானம்

March 11, 2019 தண்டோரா குழு

18 சட்டப்பேரவை தொகுதிகளோடு அறிவிக்கப்படாத மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்திட வலியுறுத்தி, திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப் பதிவு நடைபெறும் எனவும் மூன்று தொகுதிகள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், அறிவிக்கப்படாத அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் 18 தொகுதிகளோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க