• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

21ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் – வைரமுத்து

July 22, 2017 தண்டோரா குழு

21ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் என கவிஞர் வைரமுத்து அவரை புகழ்ந்துள்ளார். மறைந்த முன்னாள் இந்திய குடியசுத் தலைவர் அப்துல் கலாம் பற்றிய இசை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க வசந்த்சாய் இயக்கியுள்ளார். இந்த ஆல்பத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் இன்று வெளியிட்டார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில்,
அப்துல் கலாம் குடியரசுத்தலைவர் என்பதற்காகவோ, விஞ்ஞானி என்பதற்காகவோ அவர் நினைக்கப்படவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாத மனிதர் என்பதற்காகத்தான் நினைக்கப்படுகிறார். அவர் இறந்தபோது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின.

அதில் எனக்கு பிடித்தது, ’19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் என்ற ஆந்திர அரசின் தீர்மானம்தான். பதவி வந்தவுடன் யார் தூங்காமல் இருக்கிறாரோ அவர் தான் தலைவர். அந்த வகையில் அப்துல் கலாம் தன்னை குடியரசு தலைவராக நினைத்துக் கொண்டதில்லை. அறிவு என்பது முயற்சியால் வருவது, ஆற்றல் என்பது பயிற்சியால் வருவது. அறிவாளி ஆவது எளிது, மனிதன் ஆவது தான் கஷ்டம் என்றார்.

மேலும், நாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல தலைவர்கள் பஞ்சம் அதிகம். இந்த பஞ்சத்தில் முளைத்த ஒரு கற்பக விருட்சம்தான் தன்னலமற்ற அப்துல் கலாமுக்கு என்னுடைய சலாம் என்றார்.
இவ்விழாவில் இயக்குனர் வசந்த் சாய், இசையமைப்பாளர் ஜிப்ரான், அப்துல் கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க