• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு

July 29, 2019 தண்டோரா குழு

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, தேசிய புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு முதல், ஜூலை 29ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, 2018ம் ஆண்டுக்கான தேசிய புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,

2018 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 புலிகள் உள்ளன.கடந்த 2014 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 2,226 புலிகள் இருந்தன. தற்போது புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். 2022ம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்பாக 2018ம் ஆண்டிலேயே இந்தியா நிறைவேற்றியுள்ளது. நாம் அனைவரும் புலிகளை காத்திட கடமை பட்டிருக்கிறோம். புலிகளை காத்திட அரசும் முழு முயற்சியில் இறங்கி உள்ளன. அரசின் நடவடிக்கை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.

மேலும் படிக்க