• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

October 22, 2018 தண்டோரா குழு

ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில்,18 எம்.எல்.ஏ.க்களும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கடந்த வருடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர்.இதனால் கொறடா மூலம் இவர்கள்,எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு முடிவடைந்துவிட்டது.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இன்னும் இரண்டு நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அனைவரும் குற்றாலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.நேற்று தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில்,இன்று காலையில் டிடிவி தினகரன் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்தார்.இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் புஷ்கர விழாவில் கலந்துகொள்ளவே குற்றாலம் செல்கிறோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க