• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

August 31, 2018 தண்டோரா குழு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை 3 வது நீதிபதி சத்தியநாராயணன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி,எடப்பாடி அணி,தினகரன் அணி என மூன்று அணிகளாக பிரிந்தது.இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம்,டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் தனித்தனியே கடிதம் அனுப்பினர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக ஏற்கவும் தயார் எனவும் அக்கடிதத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து,ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைவில் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தனி நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது செப்டம்பர் 20-ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கூடாது என ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

இதையடுத்து,இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் சபாநாயகரின் முடிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால்,இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி,நீதிபதி சத்தியநாராயணன் வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.இன்றுடன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்,வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

மேலும் படிக்க