• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

13 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

September 1, 2017 தண்டோரா குழு

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத 13 ஆட்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுக்கு முன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்யும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்திரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் நீதிமன்றம் உத்திரவிட்டும் இதுவரை 19மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இதனால் அறிக்கை தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத 13 மாவட்ட ஆட்சியர்கள் செப்.21ம் தேதி நேரில் ஆஜராகும் படி உத்திரவிட்டனர்.

மேலும் படிக்க