• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1,111 ரூபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யலாம்

August 2, 2017 தண்டோரா குழு

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு,அதில் பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு,அதில் பயணிப்பவர்களுக்கு தொடக்க விலையாக 1,111 ரூபாயிலிருந்து பயணம் செல்லும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“இந்த சிறப்பு சலுகை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ம் தேதி வரை இருக்கும்.இந்த 5 நாட்களுக்குள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் புக் பண்ணுபவர்கள் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 24 தேதி வரை இந்த சலுகையைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.

அந்தவகையில் ஸ்ரீநகரிலிருந்து புதுதில்லி வர 1,611 ரூபாயும், புதுதில்லியிலிருந்து உதய்பூர் செல்ல 1,411 ரூபாயும், புதுதில்லியிலிருந்து மும்பை செல்ல 1,911 ரூபாயும், மும்பையிலிருந்து மஸ்கட் செல்ல 5,711 ரூபாயும் மற்றும் மும்பையிலிருந்து தோஹா செல்ல 7,011 ரூபாய் செலவில் பயணிக்க முடியும்.
முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை என்ற அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் படிக்க