• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

11.44 லட்சம் பான் எண்கள் ரத்து – மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல்

August 2, 2017 தண்டோரா குழு

ஜூலை 27 ம் தேதி கணக்கீட்டின்படி 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார்,

ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை 27ம் தேதி வரை கிட்டத்தட்ட 11 லட்சத்து 44 ஆயிரத்து 211 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்கள் வைத்திருந்ததை கண்டறிந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2004 முதல் 2007 வரை 1566 போலி பான் கார்டுகள்,போலி பெயர் மற்றும் அடையாள சான்றுகள் கொடுத்து பெறப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க