September 24, 2018
இந்தியாவில் ஒரு நொடிக்கு 100 ஜிபி டவுன்லோடு செய்யும் வேகத்தில் இன்டர்நெட் வசதி 2019க்குள் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“கடந்த ஜூன் மாதத்தில் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.அதிவேக இணைய வசதிக்காக அடுத்தடுத்து 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.அந்த வகையில்,வரும் நவம்பர் மாதத்தில் ஜிசாட் 29 செயற்கைக்கோளும்,டிசம்பர் மாதத்தில் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜிசாட் 11 செயற்கைக்கோளும்,அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜிசாட் 20 செயற்கைக்கோள் ஏவப்பட இருப்பதாக அவர் கூறினார்.
மேலும்,இந்த செயற்கைக்கோள் 3 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்ட பிறகு,அதிவேக இணையதள வசதி,இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் அடுத்த ஆண்டு இறுதியில் பிராட் பேன்ட் இணைப்பு வைத்திருப்பவர்களால் நொடிக்கு 100 ஜிபி டவுன்லோட் செய்யும் வகையிலான இணையதள வேகத்தை இந்தியர்கள் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்”.