• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

100 அடி பள்ளத்தில் இருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த அற்புதம் !

August 12, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் காரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அதை தவறாக இயக்கியதால், கார் சுமார் 100 அடி பள்ளத்தில் இருந்து விழுந்தது. ஆனால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை அளித்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வான்டர்கிரிப்ட் என்னும் இடத்தில், ஒரு தாய் அவருடைய எஸ்.யூ.வி ரக காரை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய 2 வயது மகன், அந்த காரில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். காரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காரை தவறுதலாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை மீறி ஓடத்தொடங்கியது. அதை எப்படி நிறுத்துவது என்று அந்த சிறுவனுக்கு தெரியவில்லை. சிறிது நேரம் ஓடிய வாகனம், சுமார் 100 பள்ளத்தில் விழுந்துள்ளது. அந்த வாகனத்தை துரத்திக்கொண்டு வந்த தாய், அதை நிறுத்த முயன்றுள்ளார். எனினும் அவரால் வாகனத்தை நிறுத்த முடியவில்லை. இதனால் அவருடைய உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டது.

பள்ளத்தில் வாகனம் விழுந்திருந்ததை கண்ட அவர் உடனே 911 என்னும் அவசர எண்ணுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த வாகனத்தை மேலே கொண்டு வந்து அதிலிருந்த சிறுவனை மீட்டனர்.

அப்போது சிறுவனின் உடலில் எந்த காயமும் ஏற்படாமல் இருந்ததை கண்ட தீயணைப்பு வீரர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இருப்பினும், இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தாயுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 100 அடி பள்ளத்தில் இருந்து விழுந்தும் சிறுவனுக்கு எந்த காயமும் ஏறப்படாதது உண்மையாகவே ஒரு அற்புதம் என்று தெரிவித்தனர்.

மேலும், தற்போது தாயும் மகனும் சுகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க