• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் !

January 12, 2019 தண்டோரா குழு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சமூகப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், பொருளாதாரரீதியில் பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. இதற்கிடையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றபட்டது.

இதையடுத்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டமானது.

மேலும் படிக்க