• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டம் வென்ற போக்குவரத்து காவலர் !

September 19, 2018 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டதை வென்றுள்ளார்.

சென்னை அடையாறில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருபவர் புருஷோத்தமன். இவர் தன் 18 வயதிலிருந்தே விளையாட்டு உடற்பயற்சி என அனைத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 2000 முதல் 2008ம் ஆண்டு வரை ஆண் அழகன் போட்டியில் கலந்து கொண்டு ஆணழகன் பட்டதை வென்றுள்ளார்.இதற்கிடையில், கடந்த 2008ம் ஆண்டு இவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், புருஷோத்தமனுக்கு எந்தவித கடுமையான உடற்பயற்சியும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், அவரது வெற்றி பெரும் தாகம் மட்டும் குறையவில்லை அதில் இருந்து மீண்டு வந்து உடற்பயற்சி மேற்கொண்டார்.இந்நிலையில், இன்று சென்னையில் மிஸ்டர் ஆணழகன் தமிழ்நாடு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட புருஷோத்தமன் 80 கிலோ பிரிவில் தங்க பதக்கம் வென்றார். மேலும்., அனைத்து எடை பிரிவிலும் சாம்பியன் பட்டதை வென்று மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் என்ற பட்டதை வென்றார்.

இது குறித்து புருஷோத்தமன் கூறுகையில்,

இந்த மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் என்னுடைய கனவு. தற்போது நான் மாநில அளவில் கலந்து பட்டம் வென்றுள்ளேன் அடுத்த கட்டமாக இந்திய மற்றும் ஆசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே என் குறிக்கோள் எனக் கூறியுள்ளார்.

அவரது வெற்றியின் தாகமே இந்த ஆண்டுக்கான மிஸ்டர் தமிழ்நாடு பட்டதை வெல்ல காரணமாக உள்ளது. இதையடுத்து, பல்வேறு பதக்கங்களை வென்று தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ள புருஷோத்தமனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க