• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹைதரபாத் “பப்” களுக்கு வருபவர்கள் ஆதார் அட்டை கட்டாயம்!

September 19, 2017 தண்டோரா குழு

ஹைதரபாத்தில் உள்ள “பப்” களுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும் என, தெலுங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பப் களுக்கு வருபவர்கள் தாங்கள், 21 வயதை கடந்தவர்கள் என்பதற்கான ஆதாரமாக ஆதார் அட்டையை காட்ட வேண்டும்.மேலும், “பப்”களுக்கு வருபவர்கள் குறித்த தகவல்களை தனியாக குறித்து வைக்க வேண்டும் என, உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதுகுறித்து, கலால் துறை கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவருமான எஸ். சீனிவாஸ் ராவ் கூறியதாவது,

ஹைதராபாத் ‘பப்’களுக்கு லைசென்ஸ் வழங்கும் போதே இதுபோன்ற உத்தரவு இருந்த நிலையில், இந்த உத்தரவு தற்போது தான் அமல்படுத்தப்படுகிறது. என்று கூறினார்.

கடந்த ஜூலை மாதம், தெலுங்கு திரைப்பட பிரபலங்களிடம், போதை பொருள் விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க