• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிதாயத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

January 28, 2024 தண்டோரா குழு

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத்தின் சார்பு சங்கமான ஹிதாயத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் மற்றும் கற்பகம் மருத்துவமனை இணைந்து மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை கோட்டைமேடு வைரவிழா மண்டபத்தில் நடத்தியது.

இந்த மருத்துவ முகாமை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத்தின் தலைவர் ஹாஜி M.A.இனாயத்துல்லா BA துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஹிதாயத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் தலைவர் எம்.ஷாஜஹான் bsc, செயலாளர் MA.சபேர் அலி, பொருளாளர் ரஹீம்,சங்க கன்வீனர்கள் சபேர் அலி, ஹாரூன் BA,
மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில்,பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை,கண்,காது மூக்கு, மற்றும் தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.இதில்,கோட்டைமேடு பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் படிக்க